மதுரையில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை
ADDED :2108 days ago
மதுரை : மதுரை தொழில் வர்த்த சங்கத்தில் ஸ்ரீ ஆப்தன் சபா சார்பில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது.
பக்தர்கள் கலசங்கள் எடுத்துவர, ஐயப்பன் பூப்பல்லக்கில் பவனி வந்தார். குருசாமி ஹரிகரன், ஐயப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகளை நடத்தினார். பாடகர் நாகராஜ், சாக்ஸ போன் குணசேகரன் ஆகியோரின் பக்தி இன்னிசை, படி பூஜை, ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ஆப்தன் சபா செயலர் மங்கையர்கரசி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.