உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சனீஸ்வரர் அருளால் சாதனை படைப்பீர்கள்

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சனீஸ்வரர் அருளால் சாதனை படைப்பீர்கள்

நல்ல மனம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!


உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக அமைந்திருக்கும் சூழலில் இந்த  புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு கேதுவின் பலத்தால் தெய்வ அனுகூலம்  கிடைக்கும். மூன்றாமிடத்தில் சனீஸ்வரர் இருப்பதால் வாழ்வில் சாதனை  படைப்பீர்கள்.

சனி, கேதுவால் எடுத்த எந்த செயலையும் வெற்றிகரமாக முடிக்கலாம்.  பொருளாதார வளம் மேம்படும். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசி கிடைக்கும்.  குருவின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். திருமணம் போன்ற  சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத்  தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை வாங்க வாய்ப்புண்டு.  மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை சுபவிஷயத்தில் தடை குறுக்கிடலாம்.  
உறவினர் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு.
பெண்கள்  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். கணவரின்  அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்கள் மூலம் குடும்ப வாழ்வு சிறக்கும். சிலருக்கு  பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ச்சி கண்டு  பெருமை கொள்வர். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு  சலுகை கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும் உறவினர்கள்  உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு சனிபகவான் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி  அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்.  புதிய தொழில்  தொடங்க வாய்ப்புண்டு.
* வியாபாரிகளுக்கு பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். பெண்களை  பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் பெறும்.
* மருத்துவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். தாங்கள் நடத்தும்  வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
* ஆசிரியர்களுக்கு குருவின் பார்வையால் பணி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.   
* அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.31க்குள் கேட்டு பெறவும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.  அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக் காண்பர். மக்கள் மத்தியில் புகழ்,  பாராட்டு கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவியும்  கிடைக்கப் பெறலாம்.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் வளர்ச்சி காண்பர். நெல்,  கோதுமை, கேழ்வரகு, சோளம்,எள் மற்றும் பனை பயிர்கள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு ஆக.31க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது.
* வியாபாரிகள் ஆக.31க்கு பிறகு கூட்டாளிகள் வகையில் பிரச்னைகளை  சந்திக்கலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் ஆக.31க்கு பிறகு வேலையில் கவனமாக  இருக்கவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பணிச்சுமையை சுமக்க  வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும்.  
* ஐ.டி., துறையினர் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும்  திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31க்குப் பிறகு உழைப்புக்கு ஏற்ற பலன்  கிடைக்காது.
* கலைஞர்கள் சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும்.
* விவசாயிகள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை செலவு பிடிக்கும் பயிர்களைத்  தவிர்க்கவும்.
* கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
* மாணவர்கள் சுமாராக படிப்பர். ஆனால் குருவின் பார்வையால் முயற்சிக்கு  தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.

பரிகாரம்:
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !