உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) சந்தோஷம் தான் அனுபவிக்க முடியாதே!

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) சந்தோஷம் தான் அனுபவிக்க முடியாதே!

எதிரிக்கும் தீங்கு எண்ணாத மகர ராசி அன்பர்களே!


ஆண்டின் முற்பகுதியில் ராகுவும் பின்னர் கேதுவும் நற்பலன் தர  காத்திருக்கின்றனர். ராகு முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர் சதியை  முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களின் ஆற்றல் மேம்படும்.  குரு  சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.  அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்படலாம். சந்தோஷத்தை எதிர்கொள்ளும்  சூழலிலும் கூட அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகலாம்.  ஆக.31க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி முயற்சி  நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. சிலர் பணி, தொழில் விஷயமாக  குடும்பத்தை விட்டு வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். மார்ச்27 முதல்  ஜூலை 7 வரை குருவின் பார்வையால் நன்மையை எதிர்பார்க்கலாம்.
பெண்கள் ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.  மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பொன், பொருள்  சேர்க்கை கிடைக்கும். சகோதரர்கள் உறுதுணையாக  இருப்பர். குருபகவானின் 9ம் இடத்துப்  பார்வை மூலம் குதூகலம் காண்பீர்கள். திருமணம் போன்ற
சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு ராகுவால் நன்மை உண்டாகும். தீயோர் சேர்க்கையில்  இருந்து விடுதலை காண்பர்.  
* வியாபாரிகளுக்கு மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை லாபம் படிப்படியாக  அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் அடைவர். பெண்கள் வகையில்  இருந்த பிரச்னை மறையும்.   
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை  அனுகூல பலன் பெறுவர்.  பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ஆக. 31க்கு  பிறகு  பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.
* ஆசிரியர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வேலைப்பளு இருந்தாலும் மார்ச் 27  முதல்  ஜூலை 7 வரை கோரிக்கைகள் நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.31க்கு பிறகு முன்னேற்றம்  காணலாம். வேலைப்பளு குறையும்.  
* அரசியல்வாதிகளுக்கு ஆக.31க்கு பிறகு தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
* கலைஞர்கள் மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை புதிய ஒப்பந்தம் கிடைக்கப்  பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழையும், பாராட்டையும் பெறலாம்.
* விவசாயிகள் அமோக வருமானம் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக நெல்,  கோதுமை, கேழ்வரகு, பயறு வகைகளில் அதிக ஆதாயம் கிடைக்கும்.
* மாணவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை கல்வி வளர்ச்சி காண்பர்.  தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். எந்த தொழிலிலும்  முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். கடின உழைப்பின் மூலம் வருமானத்தைக் காணலாம். ஆக.31க்கு பிறகு ராகுவால் இடையூறுகள் வரலாம்.
* வியாபாரிகளுக்கு ஆக.31க்குப் பிறகு வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம்,  வாக்குவாதம் ஏற்படலாம்.  மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப்  படைக்கலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள்  சிரத்தை எடுத்தே எதையும் முடிக்க  வேண்டியதிருக்கும். சிலர் திடீர் இடமாற்றம் காணலாம். பணியிடத்தில்  பொறுமையும் நிதானமும் தேவை.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பண விரயம் ஏற்பட  வாய்ப்புண்டு. பணி விஷயமாக வீண் அலைச்சல் ஏற்படும்.
* ஐ.டி., துறையினர் வேலைப் பளுவால் சிரமத்திற்கு ஆளாவர். அவ்வப்போது  வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம்.
* மருத்துவர்களுக்கு சக மருத்துவர்களின் மத்தியில் செல்வாக்கு பாதிப்பு  ஏற்படலாம்.
* வக்கீல்களுக்கு மறைமுகப் போட்டியாளர்களால் இடையூறு ஏற்படலாம்.
* அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.  
* விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்ததை விட வருமானம்  குறையும்.

பரிகாரம்:
●  ஏகாதசியன்று பெருமாள் கோயில் தரிசனம்
●  சனிக்கிழமையில் அனுமனுக்கு நெய் தீபம்
●  வியாழக் கிழமையில் குருபகவான் வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !