உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் அருகே இருக்கன்குடி கோயிலில் பாவை விழா

சாத்துார் அருகே இருக்கன்குடி கோயிலில் பாவை விழா

சாத்துார்: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மார்கழி  மாதத்தை முன்னிட்டு பாவை விழா நடந்தது.திருக்கோவில் செயல்அலுவலர்  கருணாகரன் தலைமை வகித்தார்.

பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி, ராஜேந்திரன் பூசாரி முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கன்குடி, நத்ததுபட்டி மற்றும் ஸ்ரீ சவுடாம்பிகா கான்வென்ட் மெட்ரிகுலேசன் அருப்புக்கோட்டை, சாத்துார் எஸ்.எச்.என் எட்வர்டு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்மவர் மகாஜன பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் இருந்து 200 மாணவர் கள் கலந்துகொண்டனர். திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல், கட்டுரை போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கோயில் செயல்அலுவலர் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !