உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி துவக்கம்

உடுமலை சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி துவக்கம்

உடுமலை:உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா,  பகல் பத்து உற்சவத்துடன் நேற்று (டிசம்., 27ல்) துவங்கியது.

உடுமலை, பெரியகடை வீதி, ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று (டிசம்., 27ல்), பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது.நேற்று 27ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, திருப்பல்லாண்டு பாசுரங்கள் சேவை, பெரியாழ்வார் திருமொழி பாசுரங்கள் சேவை நடந்தது. தொடர்ந்து எம்பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன.

ஸ்ரீ மச்சாவதார அலங்காரத்தில் எம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும்,20ம் தேதி வரை, பகல் பத்து உற்சவம் நடக்கிறது. நாள்தோறும், காலை, மார்கழி மாத உற்சவ பூஜையோடு, மாலையில், 4:00 மணி முதல் 6:00 மணி வரை, உற்சவம் முடியும் வரை நாள்தோறும் பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிகளுக்கு, பெருமாளின் அவதாரங்கள் சிறப்பு அலங்கார பூஜையாகநடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும், 6 ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, திருவாய்மொழித்திருநாள், இராப்பத்து உற்சவம். மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !