திருப்பூர் குடியுரிமை சட்டம் ஆதரித்து 207 திருவிளக்கு வழிபாடு
ADDED :2110 days ago
திருப்பூர்:இந்து முன்னணி, இந்து அன்னையர் முன்னணி சார்பில், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து, வீரபாண்டி, திருக்குமரன் நகரில் உள்ள, விநாயகர் திடலில் நேற்று 27ல் 207 திருவிளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன.மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இந்து முன்னணி மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்து அன்னையர் முன்னணி மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் நிர்மலா வரவேற் றார்.இதில், 207 பெண்கள் பங்கேற்று, திருவிளக்கு வைத்து, பூஜித்தனர்.