அவிநாசியில் திருமுருக பக்தர் பேரவை ஆண்டு விழா ஊர்வலம்
ADDED :2109 days ago
அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பாலதண்டபாணி கோவிலின், திருமுருக பக்தர் பேரவை சார்பில் 42வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில் அபிஷேகம் நடத்தி, பால் குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பால தண்டபாணிக்கு மகாஅபிஷேகம் நடந்தது. பின், அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி, நேற்றிரவு 27ல் மயில் வாகனத்தில் பாலதண்டபாணி திருவீதியுலா நடந்தது. இதை, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாதிபதி காமாட்சிதாச சுவாமிகள் துவக்கி வைத்தார்.