சூலுார் அனுமன் ஜெயந்தி ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2110 days ago
சூலுார்:கரவழி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேய சுவாமி கோவிலில், அனுமன் ஜெயந்தியை ஒட்டி, ஆன்மிக சொற்பொழிவு, வள்ளி கும்மி ஆட்டம், பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆன்மிக எழுத்தாளர் ராஜகோபால் பேசியதாவது: வேதங்கள், வழிபாடுகள், துன்பங்களில் இருந்து நம்மை காக்கின்றன. சீதா பிராட்டியை போல், கஷ்டங்களை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. நாட்டை விட்டு, கணவருடன் கானகம் சென்றார். அவரின் அழகில் மயங்கிய ராவணன், இலங்கைக்கு கடத்தி சென்றான். அங்கு, சிறைக்காவலில் சித்தரவதைக்கு உள்ளாக்கினான்.
மனைவியை இழந்து வாடிய ராமனுக்கு, அனுமன் ஆறுதல் கூறினார். கடல் கடந்து சென்று சீதையை மீட்க உதவினார். பகவானுக்கு ஏற்பட்ட சோதனையை கூட தீர்த்து வைத்தவர் அனுமன். அதுபோல், பக்தர்களின் துன்பங்களையும் அனுமன் போக்குவார்.இவ்வாறு, அவர் பேசினார்.