உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் டிச.31 ல் ஆன்மிக அலங்காரம்

மதுரையில் டிச.31 ல் ஆன்மிக அலங்காரம்

மதுரை : சாய் விருக் ஷா சார்பில் புத்தாண்டையொட்டி மதுரை சேதுபதி  மேல்நிலைப் பள்ளியில் ’ஆன்மிக அலங்காரம்’ நிகழ்ச்சி டிச., 31 ல் நடக்கிறது.  

இதையொட்டி மாலை 5:30 மணிக்கு, ’ஆன்மிகக் கருத்துக்களை பெரிதும் தருவது  ராமாயணமே! மகாபாரதமே!’ என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜாராம்  குழுவினரின் ஆன்மிக பட்டிமன்றம் நடக்கிறது. கார்த்திக் ஞானேஷ்வரன்  குழுவினரின், ’நாம சங்கீர்த்தனம்,’ இசை அலங்காரம், மதுரை லயக்ஷேத்ரா  வழங்கும், ’ஆடும் அழகன் கண்ணன்’ நடன-நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கும்.  பங்கேற்போருக்கு பிரசாதம் வழங்கப்படும். அனுமதி இலவசம். முன்பதிவிற்கு  99942 32874ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !