உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் திருப்படி விழா

சென்னையில் திருப்படி விழா

சென்னை : திருப்படி திருவிழாவையொட்டி, அரக்கோணம் - திருத்தணி இடையே,  சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருத்தணி முருகன் கோவிலில், நாளை மறுநாள்,  (டிசம்., 29, 30ல்)திருப்படி திருவிழா நடக்கிறது.  திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அரக்கோணத்தில் இருந்து,  நாளை மறுநாள் மற்றும் ஜன., 1ம் தேதிகளில், இரவு, 10:10 மணி மற்றும் 11:20  மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், இரவு, 10:30 மணி மற்றும் இரவு, 11:40  மணிக்கு, திருத்தணி சென்றடையும். திருத் தணியில் இருந்து இரவு, 10:40 மணி  மற்றும் 11:50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், இரவு, 11:00 மணி மற்றும் இரவு,  12:10 மணிக்கு, அரக்கோணம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !