உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு திருக்கல்யாணம்

சென்னை ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு திருக்கல்யாணம்

சென்னை : பூர்ணா, புஷ்கலாம்பாள் உடனுறை தர்மசாஸ்தாவிற்கு, 35ம் ஆண்டு  திருக்கல் யாணம், நாளை நடக்க உள்ளது.

சென்னை, தி.நகர், வடக்கு போக் சாலையில் உள்ள, காந்திமதி திருமண  மண்டபத்தில், தர்மசாஸ்தாவுக்கு, 35ம் ஆண்டு திருக்கல்யாண ஏற்பாடுகள் இன்று  28 ம் தேதி துவங்கு கின்றன. காலை, மகா கணபதி ஹோமத்துடன், வடுஹ பூஜை  துவங்குகிறது. தொடர்ந்து, பூர்ணா, புஷ்களா உடனுறை தர்மசாஸ்தாவுக்கு,  லட்சார்ச்சனை, மகா தீபாராதனை, அன்ன தானம் உள்ளிட்டவை நடைபெறும்.  பிற்பகல், 3:00 மணி முதல், சம்பிரதாய பஜனை துவங் கும். பின், கணேசாதி  தியானங்களுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம்,  கன்யாபூஜை, கவாசினி பூஜைகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, ஜானவாசம்என்னும் மாப்பிள்ளை அழைப்பும்,  தொடர்ந்து டோலோத்சவமும் நடைபெறுகிறது.நாளை 29ம் தேதி காலை, 8:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை, பூர்ண புஷ்களாம்பாள் உடனுறை தர்மசாஸ்தாவுக்கு, உஞ்சவிருத்தியுடன், சம்பிரதாயங்கள் துவங்குகின்றன. தோடய மங்களம், திவ்யநாமம், தீப பிரதட்சினம் உள்ளி ட்டவற்றை தொடர்ந்து, மாலை மாற்றுதல், முத்துக்குத்துதல் முடிந்த பின், காலை, 10:30 மணியிலிருந்து, 12:00 மணிக்குள், பூர்ணா, புஷ்கலாம்பாள் உடனுறை தர்மசாஸ்தாவுக்கு திருக்கல்யாணம்  நடைபெறும்.

இந்த வைபவத்தை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான பாகவதர்,  சிவசுப்பிரமணிய பாகவதரின் குழுவினர் நடத்த உள்ளனர்.திருக்கல்யாணத்தை  அடுத்து, நலங்கு, ஆஞ்சநேய உத்சவம் நடக்க உள்ளது. தொடர்ந்து, திருக்கல்யாண  பிரசாத விருந்து வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !