பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி வழிபாடு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா துவங்கியது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு அபிேஷகம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை குண்டம் திறப்பும், மாலையில் பக்தர்கள் பூவோடு எடுத்தும் வழிபட்டனர். இரவு, அகத்துார் அம்மன் தீர்த்த வழிபாடும், அக்னி குண்டம் வளர்த்தலும் நடந்தது. நேற்று காலை, விரதமிருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர். பக்தர்கள் குண்டம் இறங்கிய போது, கோவிந்தோ, கோவிந்தோ என கோஷமிட்டனர். அதன்பின், அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு வழிபாடு நடந்தது. விழாவில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அருண்குமார் காளிங்கராயர் முன்னிலையில், பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நாளை, 13ம் தேதி சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராட்டு, இரவு மகா அபிேஷகம், ஆராதனை நடக்கிறது.