உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா

திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா

திருப்பூர்: தமிழகத்தில், காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக, திருப்பூர் மாவட்டம், சின்னாண்டிபாளையத்தில், ஸ்ரீசித்ரகுப்தர் கோவில் உள்ளது. ஆண்டுதோ றும், சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோவிலின், 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம், பால்குடம் ஊர்வலம், ஸ்ரீசித்ரகுப்தர் உற்சவர் திருவீ தியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, கூனம்பட்டி திருமடம் நடராஜசுவாமி முன்னிலையில், யாக வேள்வி பூஜையும், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசித்ரகுப்தருக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கா ர பூஜை நடந்தது.  வெள்ளிக்கவம் தாங்கி, தங்க கிரீடம் மற்றும் கையில் தங்க எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் சித்ரகுப்தர் அருள்பாலித்தார். பூஜையின் நிறைவாக, சித்ரகுப்தர் சரிதம் பாராயணம் செய்யப்பட்டது. முக்கனிகள்  உள்ளிட்ட பழவகைகள், கம்பு மாவு, தினை மாவு, தேன், புட்டு உள்ளிட்ட பாரம்பரிய பதார்த்தங்கள் படைத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர். காலை , 10:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை , திருப்பூர், ஈரோடு, கரூர், நீ லகிரி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

நல்லாட்சி மலரும்: முன்னதாக கூனப்படி நடராஜ சுவாமி பேசுகையில், ‘‘பராபவ ஆண்டு சித்ரா பவுர்ணபூஜை சிறப்பான முறையில் அமைந்துள்ளது. நாம் எதிர்பார்க்கும் ஆட்சியும் நல்லடியாக அமையும். ‘பத்ரம், புஷ்பம், பலம், தோயும் யோ மே பக்த்யா ப்ரயச்சதி’ என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். பத்ரம் என்றால் இலை, புஷ்பம் என்றால் மலர். அதன்படியே, நல்லாட்சி மலரும். சித்ரகுப்தருக்கு பிரியமானது தாமரை மலர்;  தாமரை மலர்வது போல் நல்லாட்சி மலரும். சித்ரகுப்தர் வழிபாடு, குறைகளை போக்கி நிறைவான செல்வத்தை வழங்கும்,’’ என்றார். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !