/
கோயில்கள் செய்திகள் / மதுரை முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்!
மதுரை முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்!
ADDED :204 days ago
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது.
மதுரை, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான தெப்பக்குளம் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் கோயிலின் கருவறைக்குள் நேற்று (மார்ச் 11) முதல் 23 வரை தினமும் காலை 6:35 முதல் 6:45 மணி மற்றும் காலை 7:00 முதல் 7:10 மணி வரை சூரிய ஒளி கதிர்கள் பிரவேசிக்கும் அற்புதத்தை முன்னிட்டு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இன்று மண்டபத்தை தொட்டபடி உதித்த சூரிய பகவான் நந்தியை கடந்து பிரவேசித்தார்.இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.