உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்

முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தேரோட்டம்

தஞ்சாவூர்: முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். பல சிறப்புடைய இத்தலத்தில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவையொட்டி கடந்த 15ம் தேதி விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது.


தொடர்ந்து 16ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை திருவிழா தொடங்கியது.  16ம் தேதி முதல் 26ம்தேதி  வரை காலை மற்றும் இரவில்  படிச்சட்டம், பல்லக்கு, பூத, ஆட்டுகிடா, வெள்ளிமயில், யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடைபெறவுள்ளது.  இவ்விழாவின் முக்கிய நிகழ்வான  இன்று  24ம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அன்று காலை 7:00 மணிக்கு திருத்தேரில் சுப்பிரமணியர்,வள்ளி தெய்வானை உடன் எழுந்தருளி,நான்கு ராஜ வீதிகளிலும் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு 8 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவருதலும்  திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !