குஜராத் விஜய யாத்திரை நிறைவு செய்து காஞ்சி திரும்பிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
காஞ்சிபுரம்: குஜராத் மாநிலத்திற்கான ஆன்மிக விஜய யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று காலை காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்திற்கு திரும்பினார். கடந்த அக்., 29ம் தேதி விஜய யாத்திரையாக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த சுவாமிகள், அங்கு பல்வேறு ஆன்மிக மற்றும் தர்மப் பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து: ம் தேதி, குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள ஹாடகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற விஷ்வ சாந்தி மகா யக்ஞத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதை தொடர்ந்து, அம்பாஜி திருத்தலத்தில் உள்ள இக்யாவன் மந்திர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் சுவாமிகள் சிறப்பித்தார். குஜராத் யாத்திரையை முடித்துக் கொண்டு நேற்று காலை காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்திற்கு வருகை தந்த சுவாமிகளுக்கு, மடத்தின் சார்பில் கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.