உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக சுக்கு காபி

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக சுக்கு காபி

பழநி: பழநி முருகன் கோயிலில் யானைப்பாதை இடும்பன் கோயில் அருகே பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்க துவங்கப்பட்டுள்ளது.


பழநி முருகன் கோயிலில் வெளி மாநில, மாவட்ட, வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் தினமும் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் யானை பாதை, படிப்பாதைகளில் நடந்து மேலே ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்வர். இவர்களுக்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் கோடை காலத்தில் மோர், குளிர்காலத்தில் சுக்கு காபி கடந்த சில ஆண்டுகளாக தினமும் வழங்கிவருகிறது. தற்போது குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி தினமும் 5000 பக்தர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !