நத்தம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம்
ADDED :12 minutes ago
நத்தம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லியம்மன் கோயிலில் நேற்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.இதையொட்டி மூலவர் கைலாசநாதர்- செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் தொடர்ந்து அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.முன்னதாக கோவில் வளாகத்தில் 1008 சங்குகளை கொண்டு வில்வ இலைகள் மற்றும் பூ மலர்களால் சிவலிங்கம் வடிவில் அலங்கரிங்கப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.