திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் நாளை ரோகிணி தீபம் ஏற்றம்
நெல்லிக்குப்பம்: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் நாளை மாலை ரோகிணி தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் காலை கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. பெரும்பாலான கோவில்களில் கோவிலில் பின்புறம் உள்ள மலைகளிலேயே தீபம் ஏற்றுப்படுகிறது. ஆனால், கடலுார் அடுத்த திருமாணிக்குழியில் பழமையான அம்புஹாஹி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவிலில் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் பரணி நட்சத்திரத்தின் மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் கோவிலின் முன் உள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்படுகிறது. அதன்படி நாளை 25ம் தேதி மாலை சிறப்பு அபிஷேகமும் அம்புஹாஹி உடனுறை வாமனபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கோவின் முன் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.