உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உற்ஸவமூர்த்திக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உற்ஸவமூர்த்திக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி

ராமராதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் பொன்னூஞ்சல் சேவை நிகழ்வு பக்தர்களின் பஜனையுடன் நடைபெற்றது. ஐயப்பன் கோயில்களில்
நடைபெறும் பொன்னூஞ்சல் சேவை சுவாமி ஐயப்பனின் உற்சவ மூர்த்தியை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் எழுந்தருளச் செய்து, பக்திப் பாடல்கள் மற்றும் பஜனைகளுடன் வழிபடுவதாகும். இந்த சேவை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொன்னூஞ்சல் சேவை பொதுவாக மண்டல பூஜை, மகரவிளக்கு விரத காலங்கள், பங்குனி உத்திரம் மற்றும் முக்கியத் திருவிழா நாட்களில் மாலை நேரங்களின் போது இந்தச் சேவை விமர்சையாக நடைபெறும்.

பூசாரிகள் ஊஞ்சலை மெதுவாக ஆட்டி விட, பக்தர்கள் பாடல்களையும் சரண கோஷங்களையும் பாடி சுவாமியை வழிபடுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், மன நிம்மதி ஏற்படவும் பக்தர்கள் இந்த ஊஞ்சல் சேவையில் பங்கேற்று பிரார்த்தனை செய்கின்றனர். 


ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் நடைபெறும் பொன்னூஞ்சல் சேவையில் பங்கேற்பது மிகவும் சக்திவாய்ந்த அருள் கிடைக்கிறது என்ற பெரும் நம்பிக்கை. இதில்  நேற்று மண்டல பூஜை கால முதல் பொன்னூஞ்சல் சேவையை தலைமை குருசாமி மோகன் துவக்கி வைக்க தொடர்ந்து சிறுவர்கள் ஐயப்பனை ஊஞ்சலில் வைத்து  பக்தி பாடல்கள் பாடினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !