/
கோயில்கள் செய்திகள் / அம்பாஜியில் ஸ்ரீ காமாட்சி ஏககாவன் சக்தி பீட கும்பாபிஷேகம்! காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்று அருளாசி
அம்பாஜியில் ஸ்ரீ காமாட்சி ஏககாவன் சக்தி பீட கும்பாபிஷேகம்! காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்று அருளாசி
ADDED :1 minutes ago
குஜராத் மாநிலம் அம்பாஜியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி – ஏககாவன் சக்தி பீட ஆலயத்தின் கும்பாபிஷேகம் நேற்று நவம்பர் 22-ம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதையொட்டி, முன்னதாக யாகசாலையில் பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்ரீ காமாட்சி தேவிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். பின்னர் அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்களுக்கு அனுக்கிரக பாஷணம் மூலம் அருளாசி வழங்கினார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.