திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு அஷ்டமி அபிஷேகம்
ADDED :203 days ago
திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இக்கோயிலில் மேற்கு நோக்கி அமர்ந்த யோக நிலையில் பைரவர் காட்சி தருகிறார். இன்று காலை 12:00 மணி அளவில் மூலவர் யோகபைரவருக்கு தொடர்ந்து ரமேஷ்குருக்கள் பூஜைகள் நடத்தி பல வித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி விபூதிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர். பெண்கள் யாகசாலையில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர். திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.