வடமதுரை ஐயப்பன் மணி மண்டபத்தில் மண்டல பூஜை
ADDED :2268 days ago
வடமதுரை : வடமதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் ஐயப்பன் மணி மண்டபத்தில் மண்டல பூஜை விழா நடந்தது. சிவ வைணவ கோயில்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. பால்கேணி மேட்டில் இருந்து தீர்த்தகுடங்களில் ஒன்று யானை மீதும், மற்றவை பக்தர்களால் தலை சுமையாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், 18 படி அபிஷேகம், கோ, கஜ பூஜைகளும், 108 சங்கு, 108 கலச அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை ஐயப்ப பக்தர்கள் சேவை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.