உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,யில் ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம்

ஸ்ரீவி.,யில் ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலத்தில்  ஜீயர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை முன்னிட்டு ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் நடந்த விழாவில், பேராசிரியை கல்யாணி வரவேற்றார்.

பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் முன்னிலை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர்,  கோவை நாராயண ராமானுஜ ஜீயர், டெல்லி விஷ்ணு சித்தராமானுஜ ஜீயர், நேபாள் பராங்குச ராமானுஜ ஜீயர், ஸ்ரீரங்கம் கோயில் ஸ்தலத்தார் பத்ரி பராசர பட்டர், விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழக செயல் தலைவர் ராஜமாணிக்கம், ஒருங்கிணைப்பாளர் விஜயரங்கன் பேசினர்.  பின்னர் ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் இருந்து  ஜீயர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை,  தொழிலதிபர் ராமராஜ் துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், திருப்பாவை பாடல்களை பாடிக்கொண்டு,  நான்குரத  வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர். கோதை நாச்சியார் தொண்டர்குழாம் நாம பிரச்சாரசபா குழுவினரும், ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பு பங்கேற்றனர்.  தொழிலதிபர் சரவணதுரைராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !