ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் பத்து 6ம் நாள் வழிபாடு
ADDED :2138 days ago
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பகல் பத்து 6ம் நாள் விழாவில் நம்பெருமாள் புஜ கீர்த்தி, சவுரி கொண்டை, வைர அபய ஹஸ்தம், ரத்தினமகாலட்சுமி பதக்கம், கையில் தங்க கிளி, முத்துச்சரம், பவள மாலை, காசு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாத பாவை நோன்பு நடைபெற்று வருகிறது. இதில் 16 ம் நாளில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய என்று தொடங்கும் திருப்பாவையின் பாசுரத்திற்கு ஏற்ப கோபிகைகள், நந்தகோபன் திருமாளிகை வாயில் காப்பானை எழுப்புதல் காட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.