எமனேஸ்வரம் ஐயப்பன் கோயிலில் பஜனை வழிபாடு
ADDED :3 hours ago
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வண்டியூர் ஐயப்ப சுவாமி கோயிலில் பஜனை வழிபாடு நடந்தது. கோயிலில் மண்டல பூஜை விழாவில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு 18 படிகள் மீது ஐயப்பன் அமர்ந்த திருக்கோலத்தில் மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பின்னர் சரண கோஷம் முழங்க சுவாமி வீதி உலா நடந்தது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.