கோவை ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம்
ADDED :218 days ago
கோவை; விசுவாச வருடம் தமிழ் மாசி மாதம் - 22-ம் நாள் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிப்பதையொட்டி கோவை ராம் நகர் விவேகானந்தா ரோடு வி. என். தோட்டம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள தனி சனி பகவான் சன்னதியில் சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. இதில் பால், தேன், பன்னீர், சந்தனம், குங்குமம், பழ வகைகள்,மற்றும் வாசனை திரவியங்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.