குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
ADDED :1 days ago
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு ஸ்ரீ சனி பகவான் பெயர்ச்சியடைந்தார். அதையொட்டி குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனையுடன் துவங்கின. காலை சுயம்பு மூலவருக்கு மகா தீபம் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். மூலவர் மற்றும் உற்சவருக்கு நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் பிரமாண்டமான மூன்று எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டன. மூலவருக்கு மகாதீபம் காட்டியபோது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.