/
கோயில்கள் செய்திகள் / நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம்.. மாசு படுத்தாதீர்; ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம்.. மாசு படுத்தாதீர்; ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ADDED :5 hours ago
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார். நாளை மகாளய அமாவாசை நடக்க உள்ளது. நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது வழக்கம். அப்படி செய்து முடிந்தபின் அங்கு குப்பைகள் சேர்ந்து மாசுபடுத்துகின்றன.
இது குறித்து காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியது: அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அனைவரின் கடமை. அதே சமயம் தர்ப்பணம் முடிந்தபின் அந்த பொருட்களை நீர்நிலைகளிலேயே போட்டுவிட்டு செல்வது தவறு. நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அதை துாய்மையாக பராமரிக்க வேண்டியது நமது கடமை. எனவே தர்ப்பணம் செய்த பின் நீர்நிலைகளில் கழிவுகளை போடாமல் முறையாக அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.