உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ மத்திய திருப்பதியில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா

பஞ்சவடீ மத்திய திருப்பதியில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா

 புதுச்சேரி:பஞ்சவடீ மத்திய திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இன்று திருமஞ்சனம் ஏற்றுசுவாமிமோகினி அவதாரத்தில் அருள்பாலிக்க உள்ளார்.
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் எழுந்தருளி உள்ள பஞ்சவடீ, மத்திய திருப்பதி எனும் சன்னதி அமையப் பெற்று, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதனையொட்டி இன்று காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம் ஏற்று மாலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் தீமைகள்அடக்கி, நாடெங்கும் நன்மைகள் ஓங்க வழிவகை செய்ய எழுந்தருள உள்ளார்.

நாளை6ம் தேதி காலை 5:00 மணிக்கு பரமபரத வாசல் வழியே உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் புறப்பாடு கண்டு வசந்த மண்டபத்தில் நாள் முழுவதும் காட்சி தந்து அருள்பாலிக்க உள்ளார்.பரமபதவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சகித ஸ்ரீநிவாச பெருமாள் அதன் வழியே செல்வதால் மறுபிறப்பு ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த பரமபதவாசல் கடந்த 2019ஜூன் மாதம் 23ம் தேதி நடந்த இரண்டாவது கும்பாபிேஷகத்தின் போது நிர்மானிக்கப்பட்டது. பஞ்சவடீ சேஷத்திரத்தில் எல்லா நாளும் திருநாளே. முக்கியமாக விநாயகர் சதுர்த்தி, ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்கள் குறிப்பிடதக்கவை. அவற்றிற்கு சிகரம் வைத்தார்போல் இந்த வைகுண்ட ஏகாதசி திருநாள்இந்த 2020 ஆண்டு முதல் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள்பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின்அனுமதியுடன் பங்கு பெறலாம்.இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !