காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா
ADDED :4921 days ago
சென்னை : காரணீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பெருவிழா துவங்குகிறது.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பெருவிழா துவங்குகிறது. காலை 9 மணியளவில் கொடியேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு நூதன புஷ்ப மாவடி சேவை நடக்கிறது. ஏப்., 27ல் காலை 6 மணிக்கு அதிகார நந்தி சேவை - அன்ன வாகனம் மயில்வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். ஏப்., 29ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வருகிறார்.
மே 1ல் சிறப்பு புஷ்ப அலங்காரங்களுடன் சுவாமி திருத்தேரிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த நாள் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது. மே 4ல் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றிவரவு 10 மணியளவில் கைலாய வாகனத்தில் எழுந்தருளிகிறார். மே 5ல் இரவு 7 சுவாமி புஷ்ப பல்லக்கு சேவையில் எழுந்தருளிகிறார்.