ஏகாதசியன்று விரதம் இருப்பது எப்படி
ADDED :2139 days ago
ஏகாதசியன்று அதிகாலையில் பூஜை செய்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நுால்களை படிப்பதும், திருமாலின் பெயர்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு இல்லாத சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என்று மூன்று முறை கூறி, இலையில் உணவிட்டு, தானம் அளிக்க வேண்டும்.எஞ்சிய உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று பகலில் துாங்கக்கூடாது. எட்டு வயதிற்கு உட்பட்டவர்களும், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை. நோயால் சிரமப்படுபவர்கள் ளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.