22 குடம் அபிஷேகம்
ADDED :2137 days ago
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜஷே்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம், உற்ஸவர் பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் வழியே வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் கவசம் அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரித்தாயே செய்வதாகச் சொல்வர்.