இவருக்கும் கொழுக்கட்டை
ADDED :2137 days ago
ரங்கநாதர் சன்னதியின் எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், பெருமாள் எப்போது அழைத்தாலும், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். கஜேந்திரன் என்னும் யானை, கூகு என்னும் முதலையிடம் சிக்கித் தவித்து ஆதிமூலமே என கதறிய போது, உடனடியாக பெருமாளைத் தோளில் தாங்கி வந்தவர் இவரே. பக்தர்களுக்காக பெருமாளை அழைத்து வரும் இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீள வேட்டி அணிவிக்கின்றனர். இவரைத் தரிசிக்க வியாழக்கிழமை விசஷே நாள். அன்று கொழுக்கட்டை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதியின் முன் சுக்ரீவனும், வாலியின் மகனான அங்கதனும் துவார பாலகர்களாக உள்ளனர்.