உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழைய நிலையை மறக்காதீர்!

பழைய நிலையை மறக்காதீர்!

ஒரு பங்களாவில், அதன் உரிமையாளரும் அவரது பேரக்குழந்தைகளும்  சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பெரியவருக்கு கண்ணீர் பெருகியது.  ""தாத்தா! குழம்பு காரமாக இருக்கிறதா?” எனக்  கேட்டனர் குழந்தைகள். ""என் அன்பு செல்வங்களே! இந்த உணவு சுவையாக இருக்கிறது. அந்தக்  காலத்தில் எங்கள் வீட்டில் எந்த வசதியும் கிடையாது. உடைந்த தட்டு இருந்தால் கூட அதிலாவது சாப்பிட்டிருக்கலாம். அது கூட இல்லாததால், தரையைக் கழுவி அதில் சோறிடுவாள் அம்மா.  இப்போது அவளும் இல்லை. அவளது மகனான நான் பங்களாவில்,  வெள்ளித்தட்டில் நெய்ச் சோற்றை அதையும் இந்த விலை உயர்ந்த மேஜையின்  மீது வைத்து சாப்பிடுகிறேன். இந்த வளர்ச்சிக்கு காரணம் யார் என எண்ணினேன்.  ஆண்டவரால் கிடைத்த செல்வம் தானே! அதை நினைத்ததும் நன்றி உணர்வால்  கண்ணீர் பெருகுகிறது” என்றார்.    அன்பு இதயங்களே!  பழைய நிலைமையை யாரும் மறக்கக் கூடாது. எந்த  நிலையிலும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !