பிரணவ மந்திரமான ஓம் என்பதன் சிறப்பு என்ன?
ADDED :2179 days ago
வேதத்தை வெளிப்படுத்தும்போது கடவுள் முதலில் உச்சரித்த ஒலி நாதமே "ஓம் என்னும் பிரணவம். அனைத்து வேதங்களும் இதில் அடங்கியுள்ளது. பிரணவத்தின் விரிவாக்கமே வேதம் என்கிறது திருவிளையாடல் புராணம். எந்த மந்திரத்தை சொன்னாலும்," ஓம் எனச் சொல்லியே ஜபிப்பர். பிராணாயாமப் பயிற்சியின் போது இதை உச்சரிக்க கொடிய நோயும் தீரும்.