உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி விழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி விழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இதையொட்டி இன்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.இதில் மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளுக்கு பின் முகூர்த்தக்கால் கோவில் முன்பாக கோவிந்தா கோஷம் முழங்க நடப்பட்டது. தொடர்ந்து மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !