சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கிறிஸ்தவர்கள் சீர்வரிசை
ADDED :127 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே முத்துப்பட்டினம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அங்கிருந்து புனித நீர் சிவாச்சாரியார்களால் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரானை காண்பிக்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக, முத்துப்பட்டினம் கிறிஸ்தவர்கள் சார்பில், சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.