சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல் மாறல் பூஜை
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் மாறல் பூஜை நடைபெற்றது. ஈரோடு திருஞானசம்பந்தர் மடம் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கிர தேசிக சுவாமிகள் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் பாடல்களைப் பாட பக்தர்கள் வேலுக்கு முறைப்படி சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை மேற்கொண்டனர்.
அப்போது சிவாக்கிர சுவாமிகள் பக்தியோடு இறை நாமங்களை சொல்லி வழிபாடு செய்வதன் பலன் குறித்து பேசினார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வேலுக்கு சிறப்பு புஷ்பா அர்ச்சனை செய்து மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட வேல், முருகன்படம் மற்றும் விபூதி, ருத்ராட்ச பிரசாதங்களை வழங்கினார். ஏற்பாடுகளை சிவனாரகரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் காமராஜ், தரணிலட்சுமி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
இதில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க சோழமண்டல ஒருங்கிணைப்பாளர் கோரக்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கணேச சுவாமிகள், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார், திருவிழிமிழலை ஆடிட்டர் குருபிரசாத், ஆன்மீக அமைப்புகளின் நிர்வாக பொறுப்பாளர்கள், கிராம மக்கள், ஆசிரியர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். திருபுவனம் பாஸ்கர், ஜோதி ஆகியோர் தொகுத்து வழங்கினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாக பொறுப்பாளர் முருகன் நன்றி கூறினார்.