காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் ‘கடை ஞாயிறு விழா’ தொடக்கம்
ADDED :1 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று தொடங்கியது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில், ‘கடை ஞாயிறு விழா’ நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா இன்று தொடங்கியது. இதில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, திரளான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி கோவிலில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி கோவில் வளாகத்தில் சிவ காஞ்சி போலீசாரும், குளக்கரையை பகுதியில் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.