கருநெல்லிநாதர் சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை
ADDED :2100 days ago
சிவகாசி: திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதர் சுவாமி முருகன் கோயிலில் ஷடாக் ஷரயாகம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. காலையில் விநாயகர் பூஜை, புண்யாக வாரசம், கும்ப பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் லட்சார்ச்சனை ஆரம்பம், புஷ்பாஞ்சலி, விசஷே தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.