சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்
ADDED :2097 days ago
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருமுறை தரிசன விழாக்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று (9ம் தேதி) நடைபெற்றது. அதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையில் இருந்து தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு நகர வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். நாளை 10ம் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடக்கிறது.