தெப்பத்தேரில் அன்னுார் மன்னீஸ்வரர் உலா
ADDED :2176 days ago
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று தெப்போற்சவம் நடந்தது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 6 ம் தேதி நடந்தது.
நேற்று இரவு 7:00 மணிக்கு, தெப்போற்சவம் நடந்தது. கோவில் தெப்பக்குளத்தில், அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தெப்பத்தில் அமர்ந்து உலா வந்து அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தெப்போற்சவத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து கோவில் மண்டபத்தில் மன்னீஸ்வரர் வீற்று அருள்பாலித்தார். இதையடுத்து பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது.