திருப்பரங்குன்றம் கோயிலில் ராட்டின திருவிழா
ADDED :2230 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராட்டின திருவிழா நேற்று நடந்தது. இக்கோயிலில் திருவாதிரை திருவிழா மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டுடன் ஜன.,1 துவங்கியது.
தினமும் காலையில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு கோயில் திருவாட்சி மண்டபத்தை பல்லக்கில் மாணிக்கவாசகர் மூன்றுமுறை வலம் வந்து எழுந்தருளலும் நடந்ன. ஓதுவாரால் திருவெம்பாவை 21 பாடல்கள் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் நிறைவுற்றன. நேற்று காலையில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் வந்து இரவு கோயிலுக்குள் கண்ணுாஞ்சல் முடிந்து, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ராட்டினத்தில் எழுந்தருள ராட்டின திருவிழா நடந்தது.