சதுரகிரியில் செக் குடியரசு பக்தர்கள் தரிசனம்
ADDED :2086 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செக் குடியரசு பக்தர்கள் 42 பேர் நேற்று வந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த ஆன்மிக சுற்றுலா வழிகாட்டி பழனிச்சாமி தலைமையில் தாணிப்பாறை வந்த இவர்கள் வனத்துறை சோதனைக்கு பிறகு மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இன்று சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடக்கும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்கின்றனர். இவர்கள் கடந்த ஆண்டும் சதுரகிரி வந்தது குறிப்பிடத்தக்கது.