மாசி மகா சிவராத்திரி : ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் சாதுக்கள் ஊர்வலம்
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
மாசி மகா சிவராத்திரி யொட்டி பகல் இரவு முழுவதும் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தவில்லை. இதனால் வட, தென் மாநில பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி விட்டு கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ராமேஸ்வரம் பஜ்ரங்தாஸ் பாபா அறக்கட்டளை நிர்வாகி சீதாராம்தாஸ் பாபா தலைமையில் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ., நிர்வாகி ராமு, வி.எச்.பி., மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் ஏராளமான சாதுக்கள் புனித கலசத்தில் காங்கை நீரை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் முதல் பிரகாரத்தில் வலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்ததும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.