குரு சித்தானந்த கோவிலில் மஹா சிவராத்திரி விழா; பக்தர்கள் தரிசனம்
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி நான்காம் கால பூஜையும் நடந்தது. விடிய விடிய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம்: மகா சிவராத்திரி விழாவையொட்டி, மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பவானி துர்கா அம்மன் கேட்டரிங் சர்வீஸ் நாகராஜன் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். முன்னதாக இந்த அன்னதானத்தை தினமலர் நாளிதழ் புதுச்சேரி வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள், கோவில் தேவஸ்தான தேவசேனாதிபதி குருக்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். மஹா சிவராத்திரி விழாவினையொட்டி தேவஸ்தான கலையரங்கில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்தது.