உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோயிலில் சிவராத்திரி விழா; பாலபிஷேகம் செய்த பக்தர்கள்

ராமர் கோயிலில் சிவராத்திரி விழா; பாலபிஷேகம் செய்த பக்தர்கள்

கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய வில்வ லிங்கேஸ்வரருக்கு, பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். 

கோவை ராம்நகரிலுள்ள கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் நேற்று சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. முதல் கால பூஜை  மாலை 6.30 க்கு துவங்கியது.

பக்தர்கள் சிவலிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்றனர். 9 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12:30க்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு நான்காம் கால பூஜையும், அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. ராமர் கோயில் அபினவ வித்யாதீர்த்த மண்டபத்தில், ஸ்ரீ முரளிதரதாஸ் குழுவினர் நாம சங்கீத்தன இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.  பூஜைகளை தொடர்ந்து, உலர் பழங்கள், பல வண்ண புஷ்பங்கள், பழங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு சயன பூஜையுடன்  சிவராத்திரி நிகழ்வு நிறைவடைகிறது. 

* சிவராத்திரி விழா கோட்டை சங்கமேஸ்வரர், பேட்டை விஸ்வேஸ்வரசுவாமி, மேட்டுப்பாளையம் சாலை ஜலகண்டேஸ்வரர், உக்கடம்–புட்டுவிக்கி சாலையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !