சயன கோலத்தில் பரமக்குடி முத்தாலம்மன் பவனி
ADDED :185 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா நிறைவு நாளில் சயன திருக்கோலத்தில் அம்மன் பவனி வந்தார்.
கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்தது. அம்மன் ரிஷபம், குதிரை வாகனத்தில் அலங்காரமாகியதுடன், மின் தீப தேரில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று இரவு சயன திருக்கோலத்தில் பூ பல்லக்கில் அம்மன் பவனி வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.