முத்தங்கி அலங்காரத்தில் விழுப்புரம் ஆஞ்சநேயர் சுவாமி
ADDED :1 days ago
விழுப்புரம்: விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பின், 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.